×

கொரோனா ஊரடங்கு தளர்வு எதிரொலி; இளம் பெண்களின் காதல் ஓட்டம் மீண்டும் அதிகரிப்பு: குமரியில் அடுத்தடுத்து பதிவாகும் வழக்குகள்

நாகர்கோவில்: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குமரி மாவட்டத்தில் இளம்பெண்களின் காதல் ஓட்டங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பாக அடுத்தடுத்து வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொது போக்குவரத்தும் முடங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உருவானது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

தற்போது குறைந்த அளவில் நகர்ப்புறங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்தும் உள்ளது. போக்குவரத்து தொடங்கிய நிலையில் படிப்படியாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறார்கள். கடைத்தெருக்களில் கூட்டம் காண முடிகிறது. இந்த நிலையில் 6 மாத முடங்கி கிடந்த காதல் ஓட்டங்களும் இப்போது தொடங்கி விட்டன. வெளி இடங்களில் ரகசிய சந்திப்புகளை நடத்த முடியாமல் இருந்த காதல் ஜோடிகள், தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின் மீண்டும் ஜாலியாக உலா வர தொடங்கி உள்ளன. பூங்காக்களிலும், வணிக வளாகங்களிலும் கைகோர்த்து தங்கள் கனவு உலகில் வலம் வருகிறார்கள்.  

இதற்கிடையே கொரோனா  ஊரடங்கால் திருமண ஏற்பாடுகளுக்கு உள்ளான, இளம்பெண்கள் அடுத்தடுத்து தங்களது காதலர்களுடன் ஓட்டம் பிடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் இளம்பெண்களின் மாயம் அதிகரித்துள்ளது. கல்லூரி மாணவிகள், ெதாழில் நிறுவனங்களில் பணியாற்றி வந்த இளம்பெண்கள் என அடுத்தடுத்து பலர் மாயமாகி உள்ளனர். கடந்த 4 நாட்களில் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. காதலித்து இளம்பெண்கள் மாயமாகி வரும் நிலையில், கள்ளக்காதலிலும் பெண்கள் மாயமாகி வருகிறார்கள். 2 குழந்தைகளுடன் தாய் மாயம் போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த காதல் ஓட்டங்கள் தொடர்பாக, அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்ததும், இளம்பெண்களின் ஓட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் ஊரடங்கால் அந்த கால கட்டங்களில் இளம்பெண்கள் மாயம் தொடர்பாக எந்த வித வழக்கும் பதிவாகாமல் இருந்தது. ஆனால் இப்போது அதற்கு மாறாக அதிகளவில் இளம்பெண்கள் மாயம் தொடர்பான வழக்குகள் பதிவாகி வருகின்றன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரிடம் சிக்கினர்
வீடுகளில் பெற்றோருடன் இருந்ததால், பல இளம்பெண்கள் தங்களின் காதலர்களுடன், செல்போனில் மணிக்கணக்கில் பேச முடியாத நிலை ஏற்பட்டது. பல வீடுகளில் இது தொடர்பாக தாய்க்கும், மகளுக்கும் சண்டையும் வந்தன. மணிக்கணக்கில் பேசி பல இளம்பெண்கள் பெற்றோரிடம் சிக்கினர். தற்போது ஊரடங்கு தளர்வால் வேலை பார்க்கும இடங்களுக்கு இளம்பெண்கள் பறந்து விட்டனர். ஆனால் கல்வி நிறுவனங்கள் திறக்காததால்,  மாணவிகள் சிலர் எப்போது தங்களுக்கு சுதந்திர உலா கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.

பாதியில் நின்ற திருமண ஏற்பாடுகள்
கடந்த 5 மாதங்களாக வெளியூர்களில் படித்து வந்த மாணவிகள், வேலை பார்த்து வந்த இளம்பெண்கள் தங்கள் வீடுகளில் பெற்றோருடன் இருந்தனர். இதனால் மகள்களுக்கு பல பெற்றோர் திருமண ஏற்பாடுகளை பேசினர். இவ்வாறு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட இளம்பெண்களும் மாயமாகி உள்ளனர். இதனால் இவர்களின் திருமண ஏற்பாடுகள் பாதியில் நின்று விட்டன.



Tags : women ,Kumari , Echo of corona curvature relaxation; The increase in the flow of love in young women again: successive reported cases in Kumari
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது