×

பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைகிறதா ஒய்எஸ்ஆர் கட்சி?.. டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். ஆந்திராவுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த சந்திப்பில் கடப்பா எஃகு ஆலை திட்டம், போலாவாராம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிலுவையில் உள்ள தொகையை விடுவிப்பது ஆகியவை தொடர்பாக பிரதமரிடம் ஜெகன் மோகன் ரெட்டி விவாதித்தார்.

நிலுவையில் உள்ள வருவாய் மானிய தொகையான 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனே விடுவிக்குமாறு மோடியிடம் ஜெகன் மோகன் கேட்டுக் கொண்டார். ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய போவதாக கடந்த 8 மாதமாக செய்திகள் உலா வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசப்பட்டதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags : party ,YSR ,Jaganmohan Reddy ,BJP ,alliance ,Modi ,Andhra Pradesh ,Delhi , Is YSR party joining BJP-led alliance? .. Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy meets Prime Minister Modi in Delhi
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்