×

ஹூண்டாய் கார் தயாரிப்பில் சீனாவை முந்தியது இந்தியா; 2019-ம் ஆண்டில் மட்டும் 6,82,000 கார்கள் தயாரிப்பு: இருங்காட்டுக்கோட்டை ஹூண்டாய் நிறுவனம் சாதனை

சென்னை: சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலை 2019-ம் ஆண்டு சீனாவை விட அதிக அளவில் கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சீனா, இந்தியா, அமெரிக்கா, செக் குடியரசு, துருக்கி, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி தனது வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. தென்கொரியாவுக்கு வெளியே சீனாவில் தான் ஹூண்டாய் கார்கள் அதிகம் தயாராகி வந்த நிலையில் அந்த பெயரை தற்போது இந்தியா தட்டிச் சென்றுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 6,58,000 கார்கள் தயாரிக்கப்பட்டன.

ஆனால் சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலை 6,82,000 கார்களை தயாரித்துள்ளதாக அந்த நிறுவனம் நிதி முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2019-ம் ஆண்டு தென்கொரியாவுக்கு வெளியே ஹூண்டாய் கார்கள் அதிக அளவு தயாரித்துள்ள தொழிற்சாலை என்ற பெயரை இருங்காட்டுக்கோட்டை தொழிற்சாலை பெற்றுள்ளது. க்ரெட்டா, வெனியூ, உள்ளிட்ட ஐ20 வகை கார்கள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.


Tags : Hyundai ,India ,China ,Irunkattukottai , India overtakes China in Hyundai car production; Production of 6,82,000 cars in 2019 alone: Irunkattukottai Hyundai record
× RELATED ஹூண்டாய் மோட்டார் இந்திய தொழிற்சாலையில் 53வது தேசிய பாதுகாப்பு தினவிழா