×

பந்தலூரில் செயல்படாத ஏடிஎம் இயந்திரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி

பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர், பந்தலூர் பஜாரில் தேசிய மயமாக்கப்பட்டுள்ள வங்கி கிளை மூலம் செயல்பட்டு வரும் ஏடிஎம் இயந்திரம் அடிக்கடி பழுதாவதால் வியாபாரிகள், தோட்டத்தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் பணம் எடுக்கமுடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஏடிஎம் இயந்திரம் பழுதாகி இருப்பதால் வங்கி நிர்வாகம் அதனை சரி செய்யாமல் மெத்தனம் காட்டி வந்தது. இதை கண்டித்து நேற்று மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில் ஏடிஎம் இயந்திரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஏடிஏம் இயந்திரத்தினை பழுது பார்ப்பதற்காக தரையில் துண்டு விரித்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தை சரி செய்யாவிட்டால் விரைவில்  வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

Tags : Pandharpur , Pandhalur, ATM
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஐயப்பா...