×

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

செங்கோட்டை: புளியரை சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 1600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தமிழக - கேரள எல்லையான செங்கோட்டை புளியரை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சரக்குகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. புளியரை வழியாக கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சொல்வதை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பாவூர்சத்திரத்திலிருந்து காய்கறி லோடுடன் ரேசன் அரிசி ஏற்றிக் கொண்டு தென்மலைக்கு ஒரு மினி லாரி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி புளியரை தனிப்பிரிவு காவலர் மஜீத் புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து புளியரை காவல் நிலைய எஸ்.ஐ. முருகன், காவலர்கள் இஸ்மாயில், ஜெயராமன், இசக்கி ஆகியோர் புளியரை சோதனை சாவடியில் சந்தேகத்திற்குரிய மினி லாரியை மடக்கி பிடித்தனர். இதில் காய்கறிகள் மூடைக்கு கீழே சுமார் 1600 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் கொல்லம் கழுதுருட்டி நெடும்பாறையைச் சேர்ந்த விக்ரமன் மகன் மனோஜ் (43), கிளீனர் கொல்லத்தைச் சேர்ந்த சித்திக் மகன் ஷாஜியையும் (33) போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட ரேஷன் அரிசி மூட்டைகளையும் மினி லாரியையும் உணவு கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Kerala ,Pavoorchatram , Pavoorchatram, ration rice, confiscation
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு