×

அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம் : மனித உரிமை ஆணையம் தலையீடு!!

கள்ளக்குறிச்சி  : அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்து குதறிய விவகாரம் தொடர்பாக ஊரக மருத்துவ மற்றும் சுகாதார துறையின் இயக்குனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி ஆறுமுகம் பணியின் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
திருகோவிலூர் அரசு மருத்துமனையில் பிணவரையில்  பிரேத பரிசோதனை முடிந்து வைக்கப்பட்டிருந்த ஆறுமுகத்தின் உடலை உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உடலை வாங்கிய உறவினர்கள் ஆறுமுகத்தின் உடலை எலிகள் கடித்து குதறி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இது தொடர்பான செய்தி தினத்தந்தி நாளிதழில் வெளியானதை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தது.வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் துரை ஜெயச்சந்திரன், ஊரக மருத்துவ மற்றும் சுகாதார துறையின் இயக்குனர், கள்ளக்குறிச்சி சுகாதார துறையின் இணை இயக்குனர் ஆகியோர் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Tags : morgue ,government hospital ,intervention ,Human Rights Commission , Government Hospital, Mortuary, Body, Mice, Affair, Human Rights Commission, Intervention
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு