×

கொரோனா பாதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார் : முகக்கவசத்தை கழற்றி ஆதரவாளர்களுக்கு கையசைத்ததால் சர்ச்சை

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருப்பதும் அவரது செயல்பாடுகளும் அமெரிக்காவில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா இருவரும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த வியாழன்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த வெள்ளியன்று அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து டிரம்ப்புக்கு தரப்பட்டது.

இருப்பினும் ட்ரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வெள்ளை மாளிகைக்கு வந்தார். வெள்ளை மாளிகை முன்பு கூடியிருந்த அவரது ஆதரவாளர்களை பார்த்து டிரம்ப் கையசைத்தார். அப்போது அவர் திடீரென முகக்கவசத்தை கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தனது உடல்நிலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போன்று இருப்பதாக உணர்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.இந்த நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை டிரம்ப் உடனடியாக திட்டமிட்டு இருக்கிறார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே அச்சம் நிலவுகிறது.   


Tags : Trump ,Corona ,US ,White House ,supporters , Hathras, Rally, Kanimozhi, Prosecution...
× RELATED வரும் நவம்பரில் நடக்க உள்ள அமெரிக்க...