×

பிரித்வி, ஸ்டாய்னிஸ் அதிரடி ஆட்டம் ராயல் சேலஞ்சர்சுக்கு 197 ரன் இலக்கு

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 197 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் ஆடம் ஸம்பா, குர்கீரத் மானுக்கு பதிலாக மொயீன் அலி, முகமது சிராஜ் இடம் பெற்றனர். கேப்பிடல்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய அமித் மிஷ்ராவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 6.4 ஓவரில் 68 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 42 ரன் (23 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். தவான் 32 ரன் எடுத்து (28 பந்து, 3 பவுண்டரி) உடனா வேகத்தில் மொயீன் அலி வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 11 ரன் மட்டுமே எடுத்து மொயீன் சுழலில் படிக்கல் வசம் பிடிபட... கேப்பிடல்ஸ் அணி 11.3 ஓவரில் 90 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது. இந்த நிலையில், ரிஷப் பன்ட் - மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது.

இருவரும் இணைந்து 41 பந்தில் 89 ரன் விளாசி அசத்தினர். பன்ட் 37 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஸ்டாய்னிஸ் 24 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. ஸ்டாய்னிஸ் 53 ரன் (26 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் சிராஜ் 2, மொயீன், உடனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.

Tags : Separation ,Steinis ,Royal Challengers , Separation, Steinis Action Game Royal Challengers scored 197 runs
× RELATED சென்னை வடக்கு, மேற்கு, தஞ்சை வடக்கு,...