×

10 விக்கெட் வெற்றி 2வது இடத்தில் வாட்சன்-பிளெஸ்ஸி

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற 4 தொடக்க ஜோடிகள் காரணமாக இருந்துள்ளன. அதில் 2வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சின் ஷேன் வாட்சன் - டு பிளெஸ்ஸி ஜோடி பிடித்துள்ளது.  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் தொடக்க வீரர்களான வாட்சன் - பிளெஸ்ஸி முதல் விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 181 ரன் குவித்து வெற்றியை வசப்படுத்தினர். அதனால் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐபிஎல் வரலாற்றில் அந்த அணிக்கு இது சாதனை வெற்றியாக அமைந்தது. இதற்கு முன்பு 2017ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர்-கிறிஸ் லின் இணை 184 ரன் குவித்ததே பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அந்த போட்டியில் கொல்கத்தா 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயனை வீழ்த்தியது. இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் 163 ரன் குவித்த  மும்பை இந்தியன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள்  சச்சின் டென்டுல்கர்-டுவைன் ஸ்மித் ஜோடி இருக்கிறது. அந்தப் போட்டியில் மும்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வென்றது. அதேபோல் 155 ரன் குவித்த டெக்கான் சார்ஜர்ஸ் (ஐதராபாத்) தொடக்க வீரர்கள் ஆடம் கில்கிறிஸ்ட்-விவிஎஸ் லட்சுமணன் இணை பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது. அந்த போட்டியில் ஐதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

* தோனி 100
ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக 100 கேட்ச் என்ற சாதனை மைல்கல்லை எட்டிய 2வது வீரர் என்ற பெருமை சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கிடைத்துள்ளது. கிங்ஸ் லெவனுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல் கொடுத்த கேட்ச்சை பிடித்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு அடுத்த இடத்தை தோனி பிடித்துள்ளார்.

Tags : Watson-Plessis , Watson-Plessis in 2nd place with 10 wickets win
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம்