×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 2 வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரின் நவ்காம் பகுதியில் கந்திஜால் பாலத்தின் அருகே நேற்று 2 தீவிரவாதிகள் பைக்கில் ஆயுதங்களுடன் வந்தனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் திடீர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 2 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பி ஓடினர். வனப்பகுதிக்குள் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அப்பகுதி பாதுகாப்பு படை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


Tags : Terrorist attack ,Kashmir ,soldiers , Terrorist attack in Kashmir kills 2 soldiers
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...