×

மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை திறக்க பயணிகள் வலியுறுத்தல்

மாமல்லபுரம்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இன்னும் திறக்கவில்லை. இந்நிலையில் மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத்தலத்தை திறக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் சிற்பங்களான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கிருஷ்ணா மண்டபம், வராக மண்டபம், புலிக்குகை உள்ளிட்ட சிற்பங்கள் அனைத்து தரப்பு மக்களாலும் கவரக்கூடியதாக உள்ளது. மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நாட்டிய விழாக்கள் நடைபெறும்.

பள்ளி, கல்லூரிகளுக்கான பருவ விடுமுறை நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பல்லவர் கால சிற்பங்களை கண்டு ரசிப்பது, புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம். மேலும், மாமல்லபுரத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக தெரிந்த இடம் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடியே கிடக்கிறது. அதனால் மாமல்லபுரம் பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே, தமிழக அரசு சுற்றுலாப்பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள், மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சுற்றுலாத்தலத்தை திறக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : Travelers ,tourist spot ,Mamallapuram , Travelers urge to open Mamallapuram tourist spot
× RELATED மாமல்லபுரத்தில் பரபரப்பு சிற்ப கல்லூரி வளாகத்தில் தீ