×

முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை. செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கான 2020 - 2021ம் கல்வி ஆண்டுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை (PMSS) உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாந்தோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.3000,  (ரூ.36,000 ஆண்டுக்கு), ஆண் வாரிசுகளுக்கு மாதந்தோறும் ரூ.2500  (ரூ.30,000 ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது. இதற்கு, நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற விரும்புவோர் www.ksb.gov.in  என்ற இணைய தளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை (இ) தாம்பரம் (தொலை பேசி எண்:04422262023) மூலமாக தொடர்பு கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.12.2020. கடைசி நாளாகும். செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த தகுதியுடைய அனைத்து முன்னாள் படைவீரர்களின் மகள், மகன் ஆகியோர் அதிகளவில் இதில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Children ,Ex-Servicemen , Children of Ex-Servicemen can apply for scholarships: Collector Information
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...