×

நண்பர்களுடன் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி கார் டிரைவர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: மதுபோதை தலைக்கேறிய நிலையில், ஏரியில் மூழ்கிய கார் டிரைவர் பரிதாபமாக பலியானார். தாம்பரம் அருகே முடிச்சூர் அடுத்த லட்சுமி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). அதே பகுதியில் உள்ள ஹார்டுவேர் கடையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தராஜ், தன்னுடன் வேலை செய்யும் நூர், சரவணகுமார் ஆகியோருடன் சேர்ந்து மணிமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். முன்னதாக கோவிந்தராஜ், நூர் ஆகியோர் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில், கோவிந்தராஜ் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்றார். அப்போது சேற்றில் சிக்கி, மூச்சு திணறி தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஏரியில் மூழ்கிய கோவிந்தராஜை, சடலமாக மீட்டனர். இதையடுத்து மணிமங்கலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : car driver ,friends ,lake , The car driver drowned while bathing in the lake with friends
× RELATED கார் டிரைவரிடம் வழிப்பறி