×

ஏரியில் குளிக்க சென்ற போது சேற்றில் சிக்கி வாலிபர் பரிதாப பலி

திருவள்ளூர்: நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்றபோது சேற்றில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார். நாகபட்டினம் மாவட்டம் தொண்டன் பலூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் அருண்குமார். (20). இவர் பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விடுமுறை என்பதால் பூந்தமல்லியை அடுத்த கோலப்பஞ்சேரி கிராமத்தில் உள்ள ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது சேற்றில் சிக்கி தவித்தார். இதைப்பார்த்த நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர்.ஆனால் முடியவில்லை. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : lake , The boy was trapped in the mud while bathing in the lake and died tragically
× RELATED மண் குளியல் குளிக்க வாரீகளா!