×

அக்டோபர் மாதத்தில் டெல்லி, இந்தியாவின் பிற பகுதிகளில் எல்பிஜி சில்லரை விற்பனை விலையில் மாற்றம் இல்லை: தலைமை பொதுமேலாளர் ஜான்பிரசாத் தகவல்

சென்னை: அக்டோபர் மாதத்தில் டெல்லியிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் சமையல் எல்.பி.ஜியின் சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பொதுமேலாளர் ஜான் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியன் ஆயில் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் டெல்லியில் மேற்க்கொண்ட சில்லரை விற்பனை விலை குறைப்பு டீசல் லிட்டருக்கு ரூ.2.93 பைசாவும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.97 இந்த கால கட்டத்தில் மற்ற மார்க்கெட்களிலும் இதுபோன்ற விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மும்பையில் பொது விநியோக மண்ணெண்ணெயின் சில்லறை விற்பனை விலை அக்டோபர் முதல் லிட்டருக்கு ரூ.2.19 பைசா குறைந்துள்ளது. மும்பையில் மண்ணெண்ணெயின் விலை செப்டம்பர் மாதத்தில் லிட்டருக்கு 25.84 பைசா அக்டோபர் மாதத்தில் லிட்டருக்கு 23.65 பைசா ஆகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதியிலிருந்து மும்பையில் சில்லரை விற்பனை விலையில் படிப்படியாக லிட்டருக்கு ரூ.12.73 பைசா அளவுக்கு விலை குறைப்பு அது போலவே மற்ற மார்க்கெட்களிலும் விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அக்டோபர் மாதத்தில் டெல்லியிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சமையல் எல்பிஜியின் சில்லரை விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Janprasad ,parts ,Delhi ,India , No change in LPG retail prices in Delhi, other parts of India in October: General Manager Janprasad
× RELATED அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் என்றால் என்ன?