×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

துபாய்: ஐபிஎல் 2020 டி20 போட்டியின் 19-வது லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 197 ரன்களை வெற்றி இலக்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்ணயித்தது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Tags : IPL ,match ,Delhi Capitals ,T20I ,Bangalore , IPL 2020: Delhi Capitals win by 59 runs against Bangalore in T20 match
× RELATED முன்னேறும் முனைப்புடன் குஜராத் – டெல்லி இன்று மோதல்