×

உலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு: 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு..!!

டெல்லி: 2020-ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலகின் டைனமைட் கண்டுபிடிப்பாளரான ஸ்விடனை சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபலின் அறக்கடளை சார்பில் 1901ம் ஆண்டு முதல் அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி போன்ற சில துறைகளில் சாதனைப் படைக்கும் நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகவும் இந்த நோபல் பரிசு பார்க்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும் மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்வேறு நாடுகளை உலுக்கி எடுத்து வரும் சூழலில், கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் மனிதகுலத்துக்கு முழுமையாக வந்து சேரும் தேதி தெரியாத நிலையில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதனையடுத்து, 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெபாடிடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழிவகுத்துள்ளது. எனவே ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : world ,selectors , Nobel Prize, 2020, Medicine, Selection Committee
× RELATED சில்லி பாயின்ட்…