×

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தும் கேரள அரசு

திருவனந்தபுரம், :கேரளாவில் இடது முன்னணி ஆட்சி காலாவதிக்கு முன்பு அரசு நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுகின்றனர்.கேரளாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினசரி ஊதியத்தில் பணிபுரிகின்றனர். 3 முதல் 10 ஆண்டுகளாக பல்வேறு அலுவலகங்களில் தற்காலிகமாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானவர்களை நிரந்தர ஊழியர்களாக்கும் செயல்முறை இப்போது பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இடது முன்னணி அரசின் காலாவதிக்கு முன்னர் வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் தினசரி ஊதியம் மற்றும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துவதே இதன் நோக்கம். இதில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவை உள்ளவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் மற்றும் தினசரி ஊதியத்தில் பணியாளர்களை பணியமர்த்துவது என்பது மாநிலத்தில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.


Tags : Government ,Kerala ,contract workers , Contract Labor, Government of Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...