×

கிண்ணக்கொரையில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் பீதி

மஞ்சூர்: கிண்ணக்கொரையில் சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. இப்பகுதியை சுற்றிலும் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தேயிலை தோட்டங்கள் அதை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை சிறுத்தைகள் தாக்கி கொன்று விடுகிறது. இதனால் சமீபகாலமாக இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலரும் தங்களது கால்நடைகளை நேரடி கண்காணிப்பில் மேய்ச்சலில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிண்ணக்கொரையில் குடியிருப்பை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று தேயிலை செடிகளுக்கிடையே பதுங்கியபடி மாடுகளை நோக்கி சென்றுள்ளது. இதை கண்ட சிலர் சத்தம் போட்டுள்ளனர். இதை தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து ஓடி மறைந்து விட்டது. சுமார் அரை மணிநேரம் சென்ற நிலையில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்றில் சிறுத்தை சாவகாசமாக அமர்ந்திருந்தது. இதை அவ்வழியாக வாகனத்தில் சென்ற பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர். குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளிலேயே சிறுத்தை வலம் வருவதால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

Tags : Leopard migration ,Kinnakorai ,panic , In the bowl, leopard, nomad
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!