×

கரந்தை நேரடி நிலையத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யாவிடில் போராட்டம்: விவசாயிகள் முடிவு

தஞ்சை: தஞ்சையை அடுத்த கரந்தை, பூக்குளத்திலுள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் கூடுதலாக நெல் மூட்டைகளை பிடித்தம் செய்யாவிட்டால், போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி சுமார் 1 லட்சம் ஏக்கர் சாகுபடி நடந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடவு செய்யப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்து, சம்பா மற்றும்தாளடி சாகுபடி தொடங்கி விட்டது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கரந்தை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஏக்கர் குறுவை நெல் மணிகளை, விற்பனை செய்வதற்காக, கரந்தை, பூக்குளத்திலுள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் நெல் கொள் முதல் நிலையம் திறக்காததால், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை தேங்கின.நேரடி கொள் முதல் நிலையம் திறக்கப்படும் என விவசாயிகள், நெல்மூட்டைகளை பல நாட்களாக சாலையின் ஒரத்தில் வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக முன்பு பெய்த பலத்த மழையில் அனைத்தும் நெல் மணிகளும் மழை நீரில் நனைந்து, ஒரத்திலுள்ள அனைத்து நெல்மணிகளும்முளைத்தன.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உடனடியாக நேரடி நெல் கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 3 ந்தேதி முதல் கொள் முதல் நிலையம் திறக்கப்படும், நேற்று ஞாயிற்று கிழமைகளிலும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுஆனால் கொள் முதல் நிலையத்தில் குறைந்தளவே நெல் மூட்டைகளை பிடித்தம் செய்வதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செயய முடியாமல், சாலையின் ஒரத்தில் போட்டு வைத்து வேதனையுடன் காத்துகிடக்கின்றனர்.
மேலும், இரவு நேரங்களில் மழை பெய்தால், மேலும் நெல் மணிகளில் நாற்றுக்கள் முளைத்து, வீணாகி விட வாய்ப்புள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள் முதல் நிலையங்களிலும் கூடுதலாக நெல் மூட்டைகளை பிடித்தம் செய்ய வேண்டும்,தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டம் செய்யப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விவசாயி பிரகலாதன் கூறுகையில், ஆற்றில் தண்ணீர் வரும் என்று நம்பி குறுவை சாகுபடியை தொடங்கினோம். ஆனால் மின்மோட்டார் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்தோம். கரந்தை, பூக்குளம், மேலுார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், கடந்த மாதம் 22ம்தேதி அறுவடை செய்த சுமார் 3 ஆயிரம் நெல்மூட்டைகளை,விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தோம்.

ஆனால் கொள் முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மணிகளை முட்டாக கொட்டி வைத்தோம். கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால், பெரும்பாலான நெல் மணிகளில் நாற்றுக்கள் முளைத்து விட்டன.இதனால் உடனடியாக கொள் முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில் நேற்று முன் தினம் முதல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. பின்னர் , விவசாயிகள் நேற்று நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக சென்ற போது, தினந்தோறும் 500 நெல் மூட்டைகளை மட்டும் பிடித்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு உள்ளது என கூறி, மீதமுள்ள மூட்டைகளை வைத்து விட்டனர் என்றார்.

இது குறித்து அங்குள்ள அலுவலரிடம் கேட்ட போது, எங்களுக்கு போதுமான சாக்குகள் வழங்க வில்லை, அதனால் எங்களால் மேலும் கொள் முதல் செய்ய முடியாது என்று பதில் கூறிவிட்டனர்.ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகளை சாகுபடியாகியுள்ளது. இதில் மழையில் நனைந்ததால், ஏக்கருக்கு சுமார் 15 நெல்மூட்டைகள் பதறாகி விட்டது. எனவே, மாவட்ட நிர்வாகம், கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கூடுதலாக கொள் முதல் செய்ய வேண்டும், தட்டுபாடின்றி சாக்குகள் வழங்க வேண்டும், மறுமழை வருவதற்குள் அனைத்து நெல் மூட்டைகளை பிடித்தம் செய்யாவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Karantai Direct Station: Farmers decision , Karantai, in addition, paddy procurement, farmers
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...