×

கெமிக்கல், கழிவு பொருட்கள் கலப்பதால் அலையாத்திகாடுகள் அழியும் அவலம்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம்: தஞ்சை கடற்பகுதியில் கடல் வளம் பாதிப்பு, சுனாமியில் மக்களை காப்பாற்றிய அலையாத்திக்காடுளை அழிவில் இருந்து அரசு காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை, திருவாரூர்,தஞ்சை மாவட்ட கடற்பகுதிகளில் அரணாக இருந்து கடல்பகுதிகளை காத்துக்கொண்டிருக்கும் அலையாத்திக்காடுகள். தற்போது அழிந்து வரும்நிலையில் உள்ளது. ஆசியக்கண்டத்திலேயே அலையாத்தி காடுகள் உள்ள ஒரே பகுதி தமிழ்நாடு தான். 2004ம்ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளை உலுக்கி பல உயிர்களை பலிவாங்கிய சுனாமி தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டகடல் பகுதிகளை நெருங்காமல் மக்களை காப்பாற்றியது அலையாத்தி காடுகள் தான். அந்த அளவுக்கு மக்களைகாப்பாற்றும் சக்திஉடைய இந்த அலையாத்திக்காடுகள்தற்போது அழிந்து வரும் நிலையில் உள்ளது. மிகுந்த வேதனைக்குறியதாக உள்ளது.

மேலும் அலையாத்திகாடுகள் அழிந்துவருவதால் கடல் வளமும் பாதிக்கப்படுகிறது என்பது மறக்க முடியாத ஒன்றாகும். இறால், நண்டு, மீன் ஆகியவை இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்கள் முக்கியபங்கு வகிக்கிறது. நல்லதண்ணீரும் உப்புத்தண்ணீரும் சேரும் இடங்களில் அலையாத்திக்காடுகள் உள்ளதால். மீன்கள் இனப்பெருக்கம் செய்ய அலையாத்தி மரங்களின் வேர்பகுதிகளை நாடி வருகிறது. இந்நிலையில் தற்போது அலையாத்தி மரங்கள் அழிந்து வரும்நிலையில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடலில் மழைநீர் மற்றும் நல்ல தண்ணீர் கலந்து வந்த நிலைமாறி தற்போது கெமிக்கல் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கலந்துவருவதுதான் இதற்கு காரணம் என்று சமூகஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு காலத்தில் தஞ்சை கடல்பகுதியில் கொடிகட்டி பறந்த மீன்பிடித்தொழில் தற்போது நலிவடைந்து விட்டதற்குமுக்கிய காரணம் கடல்வளம் குறைந்ததால் தான் கடல்வளம் பெருக வேண்டும் என்றால் அலையாத்திக்காடுகளை பராமரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது பற்றி கடல் வாழ் உயிரினஆராய்ச்சியாளாகள் கூறுகையில், கடலில் மீன்உற்பத்திக்கு அலையாத்தி மரங்கள் முக்கியபங்குவகிக்கிறது. அலையாத்திமர இலைகள் மக்கி கடலில்கலப்பதால் கடலில் உள்ள உயிரினங்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. குறிப்பாக இறால் மற்றும் நண்டு வகைகள் அலையாத்திக்காடுகள் உள்ளபகுதிகளில் உற்பத்தி அதிகம் இருக்கும் அவ்வாறு உள்ள பகுதிகளில்தான் இறால் அதிகம் கிடைக்கிறது. இதனால் அழிந்துவரும் அலையாத்தி காடுகளை அரசு காப்பாற்ற வேண்டும் என கூறுகின்றனர்.

Tags : forests ,activists , Chemical, mixed with waste products, is perishable
× RELATED காடுகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு