×

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு :அதிகாரிகள் சோதனையில் ரூ. 50 லட்சம் பறிமுதல்!!

பெங்களூரு:கர்நாடக மாநில தலைவர் டி,கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2016ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டி.கே. சிவகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு டி.கே.சிவகுமாரை கைது செய்த வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் 22 நாட்கள் டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். வருமான வரித்துறையினர் இந்த நடவடிக்கையை கண்டித்து டி.கே.சிவகுமார் தொடர்ந்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரின் பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட 14 இடங்களில் ஒரே சமயத்தில் சிபிஐயினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், அவரது சகோதரரும் கனகபுரா மக்களவை உறுப்பினருமான டி.கே. சுரேசின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் டி.கே. சிவகுமார் மற்றும் டி.கே.சுரேஷ் வீடுகளில் மட்டுமில்லாமல் ராம்நகர் மாவட்டம் கனகபுராவில்  உள்ள வீடு டெல்லி, மும்பை உள்ள வீடு, அலுவலகங்கள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகுமார் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருவதற்கு முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்கும் நோக்கத்தில் மத்திய அரசு சிபிஐ போன்ற தன்னாட்சி சுதந்திரத்துடன் இயங்கும் விசாரணை அமைப்புகளை கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது என குற்றம்சாட்டுகின்றனர்.

இதைத்  தொடர்ந்து சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ அதிகாரிகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். கனகபுரா தாலுகா, தொட்டஹாலஹள்ளி கிராமத்தில் உள்ள டி.கே.சிவகுமார் தாயாரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : CBI ,DK Sivakumar ,Congress ,Karnataka State , Karnataka, Congress, Chairman, DK Sivakumar, Corruption, CBI, Prosecution
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹூவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ ரெய்டு