×

கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை டிஸ்சார்ஜ்

வாஷிங்டன் : கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது அதிபர் டிரம்ப் உடன் சென்றிருந்தார்.  இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில்  இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா தொற்று உறுதியானாலும் இருவருக்குமே எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தன. இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு லேசான காய்ச்சல், அத்துடன் சோர்வும் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்ததால் மேல் சிகிச்சைக்காக அவர் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் டிரம்ப்-ன் மருத்துவ குழு வெளியிட்ட அறிக்கையில், தற்போது காய்ச்சல் எதுவும் இல்லாமல் டிரம்ப் உடல்நிலை சீராக உள்ளது. டிரம்புக்கு இதுவரை இரண்டு முறை ரெம்டெசிவர் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குகின்றன. அவருடைய சிறுநீரக மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.இ தனிடையே திங்கள்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து டிரம்ப் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.

 டிரம்ப் மனைவி மெலெனியாவுக்கும் கொரோனா உறுதியான நிலையில் அவருக்கு லேசான இருமலும் தலைவலியும் உள்ளதாக தெரிகிறது. அவர் வெள்ளைமாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் டிரம்புடன் தொடர்பில் இருந்த உதவியாளர்கள், ஆலோசகர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

Tags : Donald Trump ,US , Corona, Infection, Treatment, President of the United States, Donald Trump, Discharge
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!