முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மனைவி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞருக்கு தென் மாவட்டங்களில் “போர் வீரராக”  விளங்கிய, மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவி ராஜாமணி தங்கபாண்டியன் உடல் நலிவுற்று மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த தங்கபாண்டியன் அவர்களுக்குக் கழகப் பணியிலும் - அவரது பொதுப்பணியிலும் உற்ற துணையாகவும், உறுதிமிக்க இல்லத்தரசியாகவும் விளங்கியவர். இன்று கழகப் பணிகளில் எனக்குத் துணையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரை வளர்த்தெடுத்து - ஆளாக்கி அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.  அவரை இழந்து வாடும் தங்கம் தென்னரசுக்கும், தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories:

>