×

ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

அண்ணாநகர்: ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (35), தொழிலதிபர். இவரது மனைவி ஹம்சா (32). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஹம்சா தனது கணவருடன் சேர்ந்து கார்களுக்கு காப்பீடு வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்த அதே பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் (28), ஹம்சாவுடன் நெருங்கி பழகியுள்ளார். அப்போது, ஹம்சா தனது குடும்ப விவகாரங்களையும், முன்னாள் காதலனுடன் திருமணத்திற்கு முன்பு நெருக்கமாக இருந்ததையும் ரத்தினகுமாரிடம் கூறியுள்ளார்.

இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்துள்ளனர். இதையடுத்து, ஹம்சாவிடம் அடிக்கடி பணம் கேட்டு ரத்தினகுமார் தொல்லை செய்துள்ளார். கணவருக்கு தெரியாமல் பணம் கொடுத்து வந்த ஹம்சா, ஒரு கட்டத்தில் தன்னிடம் பணம் இல்லை, என்று கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரத்தினகுமார், ‘‘நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால், உனது ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன்,’’ என மிரட்டியுள்ளார்.

இதனால், ஹம்சா செய்வதறியாது தவித்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த கணவர் ராமச்சந்திரன், அவரது செல்போனை எடுத்து, ‘‘ரெக்கவரி சாப்ட்வேர்’’ மூலம் சோதனை செய்தபோது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச படங்களும், வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஹம்சாவிடம் கேட்டபோது, ரத்தினகுமார் தனது கடந்த கால வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டு, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும், அதை படம் பிடித்து, பணம் கேட்டு மிரட்டுவதையும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரத்தினகுமாரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : businessman , Man arrested for extorting money from businessman's wife for posting pornography on social networking site
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்