மாயமான மீனவர் உடல் இலங்கையில் ஒதுங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 30ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் கார்சன் (23) மீன்பிடிக்க சென்றார். நடுக்கடலில் படகில் இருந்து தவறி விழுந்து காணாமல் போனார். நான்கு நாட்களாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீனவர்களின் உறவினர்களும், மீனவர்களும் படகில் சென்று தேடி வந்தனர். மீனவர் கார்சனை கண்டுபிடிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீனவர் கார்சனின் உடல், இலங்கையின் யாழ்ப்பாணம் கடல் பகுதியில் கரை ஒதுங்கியதாக இலங்கை மீனவர்கள் நேற்று மாலை தகவல் தெரிவித்தனர். இதனால் ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு சென்ற கார்சனின் உறவினர்களும், மீனவர் சங்க பிரதிநிதிகளும் உடலை இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

Related Stories:

>