×

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய தாமதமானால் ரூ.250 அபராதம்: அரசு உத்தரவு

சென்னை: ஜிஎஸ்டிஆர் 10 என்பது ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்த அல்லது சரணடைந்த பின்னர் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் தாக்கல் செய்ய வேண்டும். இது, வணிகத்தை மூடுவதால் கூட இருக்கலாம். இது வரி செலுத்துவோர் தானாக முன்வந்து அல்லது அரசாங்க உத்தரவின் காரணமாக தாக்கல் செய்யப்படலாம். இந்த ஜிஎஸ்டிஆரை ரத்து செய்வோர் 3 மாதங்களுக்குள் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கணக்குகளை தாக்கல் செய்யா விட்டால் அபராதம் விதிக்கப்படும். அதாவது ஒரு நாளைக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு நாளும் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் வரை அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதனால், வணிகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பலரும் வருமானமன்றி தவித்து வருகின்றனர். பலர், வருவாய் இழப்பால் தொழில் நிறுவனங்களை மூடியுள்ளனர். அவர்களால் கணக்குகளை தாக்கல் செய்வதிலும் சிக்கல் எழுந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில் அபராத தொகையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்யா விட்டால் ரூ.250 அபராத கட்டணமாக நிர்ணயம் செய்து வணிகவரித்துறை செயலாளர் பீலாராஜேஷ் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ஜிஎஸ்டிஆர் 10 கணக்குகளை செப்.22ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி இடைபட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டிஆர் கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதமானால் ரூ.250 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

Tags : filing , Penalty of Rs.250 for late filing of GST return: Government order
× RELATED 33% இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல்...