×

கடற்படைக்கு சொந்தமான கிளைடர் விழுந்து 2 வீரர்கள் பலி: கேரளாவில் பரிதாபம்

திருவனந்தபுரம்: கொச்சியில் நேற்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை கிளைடர் விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். கேரள மாநிலம், கொச்சியில் தென்பிராந்திய கடற்படை தளம் உள்ளது. இங்குள்ள வீரர்கள் தினமும் கிளைடர் விமானங்களில் பறந்து பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று காலை கடற்படை வீரர்களான சுனில் குமார், ராஜீவ் ஜா ஆகியோர் பயிற்சிக்காக ஒரு கிளைடர் விமானத்தில் புறப்பட்டு சென்றனர். காலை 7 மணியளவில் கடற்படை தளம் டிஓடி பாலம் அருகே எதிர்பாராத விதமாக அந்த  கிளைடர் விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த வீரர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

Tags : glider crashes ,soldiers ,Kerala , Navy-owned glider crashes, 2 killed: Pity in Kerala
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்