உள்ளாட்சிகளில் கட்டிட, திட்ட அனுமதி காலம் 8 ஆண்டுகளாக நீட்டிப்பு: நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சிகளில் கட்டிட அல்லது திட்ட அனுமதி காலம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையிலும், தேவையான நேரங்களில் மேலும் 3 ஆண்டுகளுக்கு மட்டும் ஒரு முறை உரிய கட்டணங்களை வசூலித்துக்கொண்டு கால நீட்டிப்பு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. மாமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டிட உரிமக் கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால், 5 ஆண்டுகளுக்கு செலலுப்படியாகும் வகையிலும் கால நீட்டிப்பு தேவைப்பட்டால் மாமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டிட உரிம கட்டணத்தை செலுத்தினால் மேலும், 3 ஆண்டுகளுக்கு உரிம கால நீட்டிப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கட்டண விகிதங்களை ஓராண்டிற்கு நிர்ணயம் செய்து, அதன் மடங்குகளில் 5 ஆண்டுகளுக்கு கணக்கீடு செய்வதை தவிர்த்து மாமன்றத்தால், கட்டிட அனுமதிக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஒரு முறை செலுத்தினால், 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் உரிமம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த நகராட்சி, மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related Stories:

>