×

801 உள்ளாட்சி சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக உயர்த்த ரூ.1100 கோடி நிதி: அரசு உத்தரவு

சென்னை: உள்ளாட்சியிடம் இருந்த 801 சாலைகளை மேம்படுத்த ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு இனி கிடையாது என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டில் 801 பஞ்சாயத்து யூனியன்களுக்கு உட்பட்ட 1500 கி.மீ நீளம் கொண்ட கிராம சாலை மாவட்ட இதர சாலைகளாக ரூ.1,100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.38.48 கோடியில் 28 சாலைகள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.56.26 கோடியில் 52 சாலைகள், திருவள்ளூரில் ரூ.18.70 கோடியில் 15 சாலைகள், வேலூரில் 23.98 கோடியில் 19 சாலைகள், திருவண்ணாமலையில் ரூ.44.78 கோடி செலவில் 32 சாலைகள், கிருஷ்ணகிரியில் 20.66 கோடியில் 24 சாலைகள், தர்மபுரியில் ரூ.75.59 கோடியில் 82 சாலைகள், திருப்பூரில் ரூ.47.55 கோடியில் 30 சாலைகள், கரூரில் ரூ.29.07 கோடியில் 23 சாலைகள், திருப்பூரில் ரூ.29.82 கோடியில் 26 சாலைகள், பெரம்பலூரில் ரூ.24.32 கோடியில் 19 சாலைகள், அரியலூரில் ரூ.64.32 கோடியில் 32 சாலைகள், புதுக்கோட்டையில் ரூ.71.36 கோடியில் 64 சாலைகள், மதுரையில் ரூ.28.66 கோடியில் 23 சாலைகள், திண்டுக்கல்லில் ரூ.60.07 கோடியில் 28 சாலைகள், தேனியில் ரூ.30.49 கோடியில் 21 சாலைகள்,

நெல்லையில் ரூ.4.57 கோடியில் 5 சாலைகள், தென்காசியில் ரூ.2.93 கோடியில் 3 சாலைகள், தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.42.17 கோடியில் 25 சாலைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.5.43 கோடியில் 5 சாலைகள், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.37.59 கோடியில் 28 சாலைகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.25.45 கோடியில் 13 சாலைகள், சிவகங்கை மாவட்டத்தில் ரூ.29.54 கோடியில் 26 சாலைகள் என மொத்தம் ரூ.1100 கோடி செலவில் 801 பணிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் சாலை பணிகளில் எந்தவிதமான மாற்றமும் கொண்டு வரக்கூடாது. கூடுதல் நிதி ஒதுக்கீடு கேட்டாலும் இத்திட்டத்தின் கீழ் தரப்படாது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்படுகிறது. இதையடுத்து விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

Tags : roads ,district roads , Rs 1,100 crore to upgrade 801 local roads to other district roads: Government order
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...