×

திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலராக அனில்குமார் சிங்கால் பதவி வகித்து வந்தார். இவரை மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளராக நியமித்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலராக, சுகாதாரத்துறை செயலாளர் ஜவகர்ரெட்டி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் இதுவரை வரவில்லை. இந்நிலையில் ஏழுமலையான் கோயில் ரங்கநாதர் மண்டபத்தில் நேற்று அனில்குமார் சிங்கால், செயல் அலுவலர் பொறுப்புகளை கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டியிடம் ஒப்படைத்தார். அதன்படி தர்மாரெட்டி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அவருக்கு இணை செயல் அலுவலர் பசந்த்குமார் நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Tags : Thirumalai Tirupati Devasthanam , Thirumalai Tirupati Devasthanam Executive Officer Responsibility
× RELATED திருப்பதி கோயிலில் நவம்பர் மாத அங்கபிரதட்சண டிக்கெட் நாளை வெளியீடு