கேளம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது: 2 கிலோ பறிமுதல்

திருப்போரூர்: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், கோவளம், படூர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதாக கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் சிறப்பு தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையின்போது நேற்றுமுன்தினம் கோவளம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது யாசின் (22), கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சைதன்யா (20) ஆகிய இருவரிடம் இருந்து அரைகிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் தையூர், வீராணம் சாலையை சேர்ந்த ரேவந்த் (22), படூரை சேர்ந்த தியாகு (30) ஆகிய இருவரிடம் இருந்து தலா அரைகிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

Related Stories:

>