×

கைப்பந்து நட்பு போட்டி

மதுராந்தகம்: மகாத்மா காந்தியின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள புதுப்பேட்டை இளைஞர்கள் சங்கம் சார்பில் கைப்பந்து நட்பு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும், மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி ஷாஜகான், அச்சரபாக்கம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன். மற்றும் ஆறுமுகம், சக்திவர்மன், செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், இளைஞர்கள் சமூகத்தில் ஒழுக்கத்துடனும், கல்வி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடனும் விளங்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : friendly match , Volleyball friendly match
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...