×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு பயிற்சி வகுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக காவல்துறை கூடுதல் இயக்குநர் சீமா அகர்வால் கலந்துகொண்டு, குழந்தைகள் நல அதிகாரிகளின் கடமை மற்றும் பொறுப்புகளை விவரித்து அறிவுரை வழங்கினார். மேலும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு பேட்ஜ் வழங்கியும், குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரசுரங்களையும் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எஸ்பி சண்முகப்பிரியா, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் தடுப்பு எஸ்பி ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் சிறார் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், குற்ற தொடர்புத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம், குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் அனிதா, குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகி ராமச்சந்திரன், இளஞ்சிறார் நீதி குழுமம் நிர்வாகி ஆரோக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்த பயிற்சி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து 44 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Child Welfare Officers ,Kanchipuram ,Chengalpattu District , Training Class for Child Welfare Officers, Chengalpattu District, Kanchipuram
× RELATED கடந்த ஒராண்டில் ரேஷன் அரிசி கடத்தல்...