×

முப்பெரும் விழாவை முன்னிட்டு முன்னோடிகளுக்கு பொற்கிழி: தெற்கு மாவட்ட திமுகவினர் முடிவு

திருவள்ளூர்:திருவள்ளூரில் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் திமுக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் வரவேற்புரை ஆற்றினார். எம்எல்ஏ க்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், ம.ராஜீ, ஜி.ஆர்.திருமலை, சிவசங்கரி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரை ஆற்றினார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வருகின்ற 11ம் தேதி மாலை 4 மணியளவில் முப்பெரும் விழா நடத்துவதென்றும், இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஒன்றிய, நகர, பேரூர் திமுக சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய, நகர செயலாளர்கள் கூளுர் எம்.ராஜேந்திரன், பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, பூவை எம்.ரவிக்குமார்,  அயப்பாக்கம் துரை வீரமணி, புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், மோ.ரமேஷ், கே.அரிகிருஷ்ணன், சி.சு.ரவிச்சந்திரன், எஸ்.மகாலிங்கம், டி.கிறிஸ்டி, தி.வை.ரவி, தி.வே.முனுசாமி, மி.வே.கருணாகரன், ஜி.ராஜேந்திரன், ந.ஜெகதீசன், ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயசீலி ஜெயபாலன், தங்கமணி திருமால், கிரிஜா மற்றும் பா.சிட்டிபாபு, ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : pioneers ,festival ,Southern District DMK , Apologies to the pioneers ahead of the three-day festival: Southern District DMK decision
× RELATED பொன்னேரியில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா