×

படப்பை அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை: முன்விரோதமா, தொழில்போட்டியா போலீசார் விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்:  ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் சதிஷ் (32), ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு திருமணமாகி, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று படப்பை அடுத்த காவனூர் பகுதியில் வீட்டுமனையை பார்வையிட காரில் சென்றுள்ளார். அவரது நண்பர்களான ராமு, ஆறுமுகம், ராஜா ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இடத்தை பார்வையிட்டு, பின்னர் காரில் படப்பை நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
  மதியம் 3.30 மணியளவில் படப்பை அருகே ஒரத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே சென்றபோது, அவர்களை பின்தொடர்ந்து வந்த ஒரு கார், சதிஷ் சென்ற காரின் முன்னே நிறுத்தி வழிமறித்துள்ளனர். அப்போது அந்த காரில் வந்த 5 பேர் கையில் அரிவாளுடன் சதிஷை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதனை கண்ட சதிஷ் மற்றும் அவரது நண்பர்கள் நாலாபக்கம் சிதறி ஓடினர். இதில் அந்த கும்பல் சதீஷை சுற்றி வளைத்து தலை, கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் சதிஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சதிஷ் இறந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் காரில், படப்பை நோக்கி தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சதிஷ் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமா அல்லது தொழில்போட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார  என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் காரில் வந்த சதிஷ் நண்பர்களான ராமு, ஆறுமுகம் ஆகியோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜாவை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடுரோட்டில் வாலிபர் சடலம் கிடந்ததால் அந்த சாலையில் போலீசார் ஒருமணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

 செலவுகளை திரும்பிச் செலுத்துவதற்கும், கொரோனா வைரஸ் காரணமாக இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு 25லட்சம் வழங்குவதற்கு வாரியம் தயக்கம் காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் வைரசின் தொற்றை குறைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக இடைவெளி, குளிரூட்டப்படாத அரங்குகளில் அலுவலக கூட்டங்களை நடத்துதல், பெரிய திரைகளை வழங்குதல், தனிப்பட்ட தொலைபேசிகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Real estate tycoon ,death ,Padappai ,police investigation ,Anti-professional , Real estate tycoon hacked to death in broad daylight near Padappai: Anti-professional, professional police investigation
× RELATED இளம்பெண்ணுக்கு காதல் டார்ச்சர்: அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை