×

கொச்சி அருகே இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் கீழே விழுந்து விபத்து: 2 வீரர்கள் உயிரிழப்பு

கொச்சி: இந்திய கடற்படைக்குச் சொந்தமான சிறிய ரக கிளைடர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி தளத்தில் இருந்து இன்று காலை இரண்டு கடற்படை வீரகள் சிறிய ரக கிளைடர் விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோப்பும்படி பாலத்தின் நடைபாதையில் திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கிய லெப்டினெட் அதிகாரி ராஜீவ் ஜா, மற்றொரு அதிகாரி சுனில் குமார் ஆகியோரை மீட்டு சஞ்சீவானி ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால், அங்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்ப்பட்டது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலியான லெப்டினென்ட் அதிகாரி சஞ்சீவ் ஜா டேராடூனையும், சுனில் குமார் பிஹார் மாநிலம், போஜ் நகரையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian Navy ,glider crashes ,soldiers ,Kochi , Indian Navy small glider crashes near Kochi, killing 2 soldiers
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...