×

கோவை, மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க விருப்பம்

சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட 10 நகரங்கள் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்நிலையில் தனி மனித இடைவெளியை பின்பற்றியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.இதில் குறிப்பாக பொதுமக்களிடம் சைக்கிள் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக INDIA CYCLES 4 CHANGE CHALLENGE என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க 100 ஸ்மார்ட் சிட்டி நிறுவனங்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை ஆய்வு சிறந்த 8 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.

இதன்படி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 நகரங்களில் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன்படி சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், வேலூர் உள்ளிட்ட நகரங்களில் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சிறப்பு திட்டங்கள் துறையின் கீழ் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஸ்மார்ட் பைக் நிறுவனம் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை செயல்படுத்திவருகிறது.


Tags : bicycle use ,cities ,Madurai ,Coimbatore , Coimbatore, Madurai, Bicycle
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...