பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ருப்லேவ்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனுடன் மோதிய ருப்லேவ் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீரர்கள் ரபேல் நடால், கரினோ புஸ்டா (ஸ்பெயின்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஐரினா பராவை (ருமேனியா) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories:

>