×

வந்தார் பென் ஸ்டோக்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து). அவரது தந்தை ஜெரார்டு ஸ்டோக்ஸ் உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊரான கிறைஸ்ட்சர்ச்சில் (நியூசிலாந்து) சிகிச்சை பெற்று வருகிறார். அவரை உடன் இருந்து கவனித்துக் கொள்ள பாகிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட், டி20 தொடர்களில் இருந்து பென் விலகினார். கூடவே இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்திடம் காலவரையற்ற விடுப்பு எடுத்து ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து சென்றார். அதனால் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் விளையாடிய முதல் 4 போட்டிகளில்  ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. இந்நிலையில் ஸ்டோக்ஸ்  நேற்று விமானம் மூலம்  ஐக்கிய அரபு அமீரகம் வந்து சேர்ந்தார். அங்கு 6 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல், கொரோனோ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அக்.11ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான அல்லது அக்.14ம் தேதி  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தானுக்காக  களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : Ben Stokes , Ben Stokes
× RELATED டி20 உலக கோப்பை தொடரில்...