×

நடிகர் கலாபவன் மணியின் தம்பி தற்கொலை முயற்சி: விஷம் குடித்தார்

திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகராக நுழைந்து கதாநாயகன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்தவர் கலாபவன் மணி. தமிழ், தெலுங்கு என பல ெமாழி படங்களில் நடித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மயங்கி கிடந்த இவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

இவரது தம்பி ராமகிருஷ்ணன். நடன கலைஞர். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சூரில் உள்ள சங்கீத நாடக அகாடமியில் ஆன்லைன் மூலம் மோகினியாட்டம் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி ேகட்டிருந்தார். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அவர் சங்கீத நாடக அகாடமி முன் ேபாராட்டம் நடத்தினார். இந்நிலையில், நேற்று இரவு ராமகிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் காணப்பட்டார். உறவினர்கள் அவரை மீட்டு சாலக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Tags : Kalapavan Mani ,brother , Suicide, attempt
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...