×

ஆரணி தொகுதி காங். எம்பி விஷ்ணு பிரசாத்துக்கு கொரோனா உறுதி

சென்னை: ஆரணி தொகுதி காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்துக்கு கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டது. இதையடுத்து, விஷ்ணு பிரசாத்தும், அவரது மனைவி சங்கீதாவும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். பரிசோதனை முடிவில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இருவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் உத்தண்டியில் உள்ள வீட்டில் இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

Tags : Vishnu Prasad ,Arani Volume Cong ,Corona , Arani, Corona
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,148,698 பேர் பலி