×

ஓட்டல் ஊழியரை தாக்கிய போலீஸ்காரர் இடமாற்றம்

அண்ணாநகர்: அமைந்தகரையில் உள்ள ஒரு ஓட்டலில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (50) கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.  அப்போது ரோந்து வாகனத்தில் அங்கு வந்த காவலர் வெற்றிவேலன், கடையை மூடும்படி உத்தரவிட்டார். பின்னர், கேஷியரிடம் சென்று, இலவசமாக 2 பிரைடு ரைஸ் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், கேஷியர் ஆறுமுகம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த காவலர் வெற்றிவேலன், அவரது சட்டையை பிடித்து தரதரவென ரோந்து வாகனத்துக்கு இழுத்து சென்றார். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கிருந்து வெற்றிவேலன் ரோந்து வாகனத்தில் சென்றுவிட்டார்.

இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் கேஷியர் ஆறுமுகம் மற்றும் வியாபாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலர் வெற்றிவேலன் மற்றும் ரோந்து வாகன டிரைவர் ஏழுமலை ஆகியோரிடம் விசாரித்தனர். அதில், இலவசமாக பிரைடு ரைஸ் கேட்டதை வெற்றிவேலன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காவலர் வெற்றிவேலன் மற்றும் டிரைவர் ஏழுமலை ஆகிய இருவரை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்து, அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags : policeman ,hotel employee , Policeman, relocation
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...