யுபிஎஸ்சி தேர்வர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: நாடு முழுவதும் இன்று யுபிஎஸ்சி தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்களின் வசதிக்காக மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் தேர்வு எழுதுவோர் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை 1 மணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்படும், என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையை இன்று (4ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்குகிறது. ரயில் சேவை நாள் முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>