×

ராயப்பேட்டை லாட்ஜில்போதை மாத்திரை பயன்படுத்திய பள்ளி மாணவர்கள் 2 பேர் கைது

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்திய பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை ஆகிய பகுதிகளில் மாணவர்களிடையே கஞ்சா பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராயப்பேட்ைட பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை ஒன்றில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சிலர் பயன்படுத்துவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்த லாட்ஜிற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, ஒரு அறையில் 2 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு வாலிபர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பயன்படுத்தி, மயக்கத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் 2 உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை காவல் நிைலயத்திற்கு அழைத்து சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை எங்கே வாங்கினார்கள், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா விற்பனை
பள்ளிக்கரணை 200 அடி சாலையில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ரஞ்சித் (23), வேளச்சேரி பவானி நகரை சேர்ந்த சங்கர நாராயணன் (20),  ஆதம்பாக்கம் கக்கன் நகரை சேர்ந்த ரூபன்ராஜ் (19), அயனாவரத்தை சேர்ந்த சரண் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, 2 பைக், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags : school students ,lodge ,Raipet , ROYApet, school students, arrested
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்