×

எடப்பாடிக்கு செக் வைக்க முடிவு? ஓபிஎஸ் உடன் கொங்கு மண்டல நிர்வாகிகள் திடீர் சந்திப்பு: பரபரப்பு தகவல்கள்

பெரியகுளம்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இடையே ‘பனிப்போர்’ நிலவி வருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று மதியம் கிளம்பி, தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு இரவு 7.45 மணியவில் காரில் வந்தார். திருச்சி, திண்டுக்கல் வழியாக பெரியகுளம், தெற்கு அக்ரகாரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அவரை தேனி மாவட்ட அதிமுக செயலாளர் செய்யதுகான், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர் அவரது ஆதரவாளர்கள் பலரும் ஒருவர் பின் ஒருவராக வந்து சந்தித்து பேசினர். அவர்களுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை நடத்தினார். அவரது வீட்டில் ஓபிஎஸ்சின் மூத்த மகனும், தேனி எம்பியுமான ப.ரவீந்திரநாத்தின் மூத்த மகன் ஜெய்தீப் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இந்தக் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ்சும் கலந்து கொண்டார். முன்னதாக சென்னையில் இருந்து பெரியகுளம் வரும் வழியில் விழுப்புரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விழுப்புரம், திருச்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து, எடப்பாடி ஆதரவாளர்களுக்கு எப்படி செக் வைக்க வேண்டும்,

அடுத்த கட்ட நகர்வு, திடீரென எதிர்பாராத பிரச்னை ஏற்பட்டால் சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஓபிஎஸ் பேசியுள்ளதாகவும் தெரிகிறது. தொடர்ந்து தன் ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் ‘புதிய அசைமென்ட்’ கொடுத்துள்ளாராம். இதையடுத்து பெரியகுளத்தில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கொங்கு மண்டலத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை ஓபிஎஸ் பெரியகுளம் வரச் ெசான்னதாக தொிகிறது. இதைத் தொடர்ந்து கொங்கு மண்டல அதிமுக முக்கிய நிர்வாகிகள் இன்று ஓபிஎஸ்சை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் சண்முகம் தன் ஆதரவாளர்களுடன் இன்று காலை ஓபிஎஸ்சை சந்தித்து பேசினார்.

அணி திரட்டும் படலம் ஆரம்பம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் இன்று துணை முதல்வர் ஆலோசனை நடத்துவதை தொடர்ந்து, தென்மண்டல நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் அணி திரட்டும் படலம் ஆரம்பமாகி உள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் ஏன்?
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வரும் நேரடியாக மோதி கொண்டனர். தொடர்ந்து சென்னையில் தங்கி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓபிஎஸ்சின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிய விவரங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உடனே தெரிந்து விடுகிறதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த வந்துள்ளதாக கூறப்படுகிறது.


Tags : executives ,Congolese ,OBS , Decided to put a check on Edapati? Congolese regional executives meet with OBS: sensational news
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது