×

போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தும் மோடி : முத்தரசன் தாக்கு

பெரம்பலூர்,:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பெரம்பலூரில் அளித்த பேட்டி:
பாபர் மசூதி இடிப்பு குறித்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாத நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் மற்றும் போராட்டக்காரர்களை பிரதமர் மோடி கொச்சைப்படுத்துகிறார்.

இதேபோன்று தொழிலாளர்களுக்கு எதிராக சட்டம் நிறைவேற்றி, நூற்றாண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகிறது. சாதாரண மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக மத்தியஅரசு செயல்படுகிறது. அதற்கு மாநில அரசும் துணை போகிறது. நாடு அபாயகரமான இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சர்வாதிகாரம் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஜனநாயகம் மீது நம்பிக்கை உடையவர்கள், பாசிசத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் சட்டத்தை மதிப்பவர்கள் இதனை எதிர்த்துப் போராட முன்வரவேண்டும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் 12ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெறும். வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,protesters ,attack ,
× RELATED கால்பந்து ஜாம்பவான் மரடோனா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்