×

சீர்காழி அருகே இயற்பெயரை மறைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இயற்பெயரை மறைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர், அரசு கூடுதல் முதன்மை செயலருக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நடராஜன் என்பவர் வானகிரி ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார். பிச்சைமுத்து என்ற பெயரை நடராஜன் என போலி ஆவணங்கள் கொண்டு பெயர் மாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.


Tags : State Election Commission ,election official ,Sirkazhi , Sirkazhi, pronoun, Local Election, Victory, Election Officer, Inquiry, Election Commission
× RELATED சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர்...