×

நேற்று முதல் லேசான காய்ச்சல்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி.!!!

வாஷிங்டன்: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அடுத்த மாதம் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர்  டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இருவரின் பிரச்சாரமும் கடந்த சில  நாட்களாக உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இருவரும் ஒரே மேடையில் நேருக்கு நேர் நின்று, விவாதம் செய்தனர். அப்போது, தனிப்பட்ட முறையிலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் 31 வயதான பெண் உதவியாளரான ஹோப் ஹிக்சுக்கு 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் எப்போதுமே டிரம்ப், மெலனியாவுடன்தான் இருப்பார். இதனால், அவருடன்  தொடர்பில் இருந்த டிரம்ப்பும், மெலனியாவும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில், இருவருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அதற்கான காய்ச்சல், சளி, இருமல்  போன்ற எந்த அறிகுறியும் இல்லாமல், இருவருமே உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, இருவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்தனர். இருப்பினும், நேற்று முதல் தொடர்ந்து டிரம்ப்பிற்கு லேசான  அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேல் சிகிச்சைக்காக அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட  உள்ளதாக வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் கெய்லி மெக்யெனனி தெரிவித்துள்ளார். அதிபர் தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளதாகவும், சிறிய அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவக்குழுவினரின் அறிவுறுத்தலையடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அதிபர் டிரம்ப் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மகத்தான ஆதரவுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் வால்டர் ரீட் மருத்துவமனைக்குச் செல்கிறேன். நான் நன்றாக செய்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால், விஷயங்கள்  செயல்படுகின்றன என்பதை நாங்கள் உறுதிப்படுத்தப் போகிறோம். முதல் பெண்மணி (மெலனியா) மிகவும் சிறப்பாக செயல்படுகிறார் என கூறியுள்ளார்.


Tags : Trump ,military hospital ,US , Mild fever since yesterday: US President Trump admitted to military hospital suffering from corona. !!!
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...