×

கார் டிரைவர் மீது நடிகை முமைத்கான் புகார்

கந்தசாமி, வேட்டையாடு விளையாடு, போக்கிரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியவர், முமைத்கான். மம்பட்டியான் உள்பட ஓரிரு  படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஐதராபாத்தில் வசிக்கும் அவர், சில வாரங்களுக்கு முன்பு வாடகை காரில் கோவா சென்று  வந்திருக்கிறார். இதையடுத்து கார் டிரைவர் ராகவா ராஜு முமைத்கான் மீது புகார் கூறுகையில், ‘3 நாட்கள் மட்டுமே என்று சொல்லி கோவாவுக்கு அழைத்துச் சென்று, 8 நாட்கள் வரை தங்க வைத்தார். வாடகை பாக்கியான 15 ஆயிரம் ரூபாயை  கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்’ என்று தெரிவித்து இருந்தார்.

இதையறிந்து ஆவேசம் அடைந்த முமைத்கான், டிரைவர் ராகவா ராஜு மீது புஞ்சகட்டா போலீசில் புகார் அளித்துள்ளார். ‘டிரைவருக்கு சேர வேண்டிய  பணம் கொடுக்கப்பட்டு விட்டது. ஏதோ உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

வெப் தொடர் தயாரிக்கிறார் தோனி
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர்,  தற்போது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஓய்வுக்கு பிறகு தோனி தன் மனைவி சாக்‌ஷியுடன்  இணைந்து பொழுதுபோக்கு துறையில் ஈடுபடுகிறார். அவர் தயாரிக்கும் வெப் தொடர் சயின்ஸ் பிக்சன் கதையுடன் உருவாகும் என்று அறிவித்துள்ள  சாக்‌ஷி, ஏற்கனவே கபீர் கான் இயக்கத்தில் உருவான ரோர் ஆஃப் லயன்ஸ் என்ற ஆவணப் படத்தை தயாரித்து இருந்தார். வெப் தொடரை தொடர்ந்து  பாலிவுட்டுக்கு சென்று, இந்தி படங்கள் தயாரிக்கவும் தோனி முடிவு செய்துள்ளார்.

லாக்டவுனுக்கு பிறகு வரும் கொரோனா வைரஸ்
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியா முழுவதும் மூடப்பட்டுள்ள சினிமா தியேட்டர்களை, வரும் 15ம் தேதி முதல் திறக்கலாம் என்று மத்திய  அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து மாநில அரசுகளும் தியேட்டர்களை திறக்க முடிவு செய்து உள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில்  வரும் 15ம் தேதி தியேட்டர்கள் திறப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள கொரோனா வைரஸ் என்ற  படம் வெளியாகிறது. இதை அகஸ்தியா மஞ்சு இயக்கியுள்ளார். லாக்டவுனில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த குடும்பத்தில் நடக்கும்  பிரச்னைகளை சொல்லும் இப்படம், குறைந்த பட்ஜெட்டில் 20 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Mumtaz Khan ,car driver , On the car driver Actress Mumtaz Khan complains
× RELATED தொடர் பைக் திருட்டு: கார் டிரைவர் கைது